Wednesday, August 15, 2018

YERKKARAIYIN MELE.


                                      ஏரிக் க ரை யின் மே லே 
 
                   இனி மை யா ன  காலை ப்  பொ ழுது.  அ மெ ரி க் கா வி ன் வட கி ழ க் கு ப்  ப கு தி யி ல்    இ ப் போ து  கோ டை காலம் .நான்  என்  கணவருடன் ,ஒரு  சில  மாதங்கள் ,என் மகன் மற்றும்   குழைந்தைகளுடன் ,தங்குவதற்காக , மேரிலேன்ட்  மாநிலத்தில்   உள்ள , கிரீன்பெல்ட்  என்ற நகரத்திற்கு வந்துள்ளோம் .
               
                  இப்பகுதியில்  உள்ள ஓவ்வொரு  வீடும் ,ஓங்கி உயர்ந்து  வளர்ந்த மரங்களுக்கு  இடையே கட்டப் பட்டிருப்பது ஒரு சிறப்பு .மரங்கள் அடர்ந்த காட்டின்நடுவே வசிப்பது போன்ற உணர்வு .

            அமெரிக் கா சென்றால்  எனக்கு மிகவும் பிடித்த  நடை பயிற்சியை  மேற்கொள்வது என்னுடைய   வழக்கம்.இந்த  முறையும் ,இங்கு வந்த  அடுத்த தினத்திலிருந்தே நான்  என்னுடைய நடை பயிற்சியை தொடங்கி விட்டேன்.
         
          அங்கு குடியிருப்பு பகுதியும்  ,அங்காடிப்பகுதியும்  தனித்தனியாக  இருக்கும் . ஒரு பெட்டிக்கடையைக்   கூட குடியிருப்ப்பகுதியில்  பார்க்க முடியாது .ஆகையால்  . நடப்பதற்கு உற்சாகமாக இருக்கும் . மைல் கணக்கில் நீண்டு செல்லும் நடை பாதைகள் .போக்கு வரத்து வண்டிகளின்
இடர்  பாடுகள் இன்றி நடப்பது  என் மனதிற்கு பிடித்த பொழுது போக்கு.
         ஒரு  நாள் என் மகன்'ஏம்மா சாலையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள்?
 ஏரிக்கரைக்கு போகலாம் வாருங்கள் "என்று அழைத்துச்சென்றான் .  அது
  எங்கள் தெருக்கோடிக்கு சென்று ,அங்கிருந்து நூறு அடி இறக்கத்தில்இறங்கி
 நடந்தால் ! அங்கு  அகண்டு விரிந்த  புல் வெளி !.தலையை  உயர்த்திப்பார்த்தால் அடர் பச்சை நிறத்தில் பல விதமான வடிவங்களில்
இலைகள் அடர்ந்த நீண்டு உயர்ந்த மர ங்களைக்கொண்ட  காடு ..அத்தனையும்  ஓங்கு மரம் என்னும் ஓக் மரங்கள் . வில்லோஓக்,ஸ்வீட்கம் ஓக் என்று  பல வகையுண்டு  என்று தெரிந்து கொண்டேன் ..
   
            அதன் நடுவில் தெளிந்த நீர் பரப்புடன் கூடிய பெரிய ஏரி .சிறிய நதியைபோன்றுள்ளது .அந்த ஏரியை ஒரு முறை  சுற்றி வந்தால் மூன்று மைல்  நடப்பதற்கு சமம் .
        அதன் அமைப்பு: நடுவில் ஏரி ..அதை சுற்றி கிட்டத்தட்ட நூறு அடி அகலத்திற்கு புல் தரை .நடுநடுவே உட்கார்ந்து இளைப்பாற  வும் ,ஏரியின் அழகை ரசிக்கவும் ஏதுவாக மர இருக்கைகள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன .
ஆங்காங்கே கரி அடுப்புகள் (barbiquegrill  )அமைக்கப்பட்டிருக்கின்றன.
     விடுமுறை நாட்களில் மக்கள்  தங்கள் சுற்றத்தாருடன்  வந்து இந்த கரி அடுப்புகளை பற்ற வைத்து அதில் உணவுப்பொருட்களை,வாட்டி அல்லது சுட்டு  சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.சில மணி நேரம் அவ்விடத்திலேயே
   
தங்கி பேசி,விளையாடி பொழுது போக்குகின்றனர் .
        அடுத்து  நீண்ட நெடிய பாதை சரளைக்கற்களால் வேயப்பட்டிருக்கின்றது. வசதியான தார்ரோடு  கிடையாது.சில இடங்களில்
மலை ஏறுவது போல் ஏறி சில இடங்களில் பள்ளத்தில் இறங்குவதுபோல்
இறங்கிச்  செல்ல வேண்டும் . சிலஇடங்களில் பாதை வளைந்தும் ,நெளிந்தும் செல்லும் .
              இத்தகைய  பாதையில்  சிலர் வேகமாக ஓடுவார்கள்.  சிலர் ஓட்டமும்
 நடையுமாக செல்வார்கள் .என்னைப்போன்ற வயதானவர்கள்  ஒரே சீராக
  நடந்து செல்வார்கள் .
           
               இங்குள்ள மக்கள் ஏரியை சுற்றி நடப்பதையும் ,ஓடுவதையும்  ஒரு தவம் மேற்கொள்வது போலவே செய்கிறார்கள் . மழையோ, வெயிலோ இவர்கள் பொருட்படுத்துவதில்லை . என்னையும் இந்த ஆர்வம்  தொற்றி க்கொண்டதில்   வியப்பில்லை .
              நடந்து செல்லும்போது எதிர்ப்  படுபவர்கள்   "ஹல்லோ "அல் லது "குட்மார்னிங் "  என்று புன்முறுவலுடன் முகமன் கூறுவதும்  , நான் திரும்ப அவர்களை வாழ்த்துவதும்  , அது  ஒரு தனி அனுபவம்! .
          இந்த நடை பாதையைத்தாண்டி மரங்கள் அடர்ந்த  காடுகள் அமைந்த
  குன்றுகள் .அதன் மேல் ஆங்காங்கே தனித்தனி வீடுகள் மிகவும் அழகாக
   ஏரியைப்பார்த்தாற்போல்  கட்டப்பட்டிருக்கின்றன .இந்த வீடுகளுக்கு விலை மதிப்பு அதிகம் .
         
             என் மகன் குடியிருக்கும்   தெருவில் பத்து வீடுகள் இருக்கின்றன. இந்தத்தெரு வின்
   ஒரு  முனையிலிருந்து வெளியிடங்களுக்கும் ,மற்றொரு முனை நேராக எரிக்கு செல்லும்படியாகவும்  அமைக்கப்பட்டுள்ளது . இப்பகுதியில் உள்ள எல்லா தெருக்களுமே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது இதே போல் மழைக்காலத்தில் ஒவ்வொரு தெருவிலிருந்தும் மழைநீர் வடிகால் குழாய்கள் ஏரியை சென்று அடையுமாறு  அமைக்கப்பட்டிருப்பது ,அவர்களதுநகர நிர்மாணத்திறமையைக்காட்டுகிறது .
        காலை வேளையில் வண்டிகளின் குறுக்கீடு இயந்திரங்களின் சப்தம் ,கூட்ட  .நெரிசலில் சிக்காமல்  பச்சை பசேல் ஓங்கி நிற்கும் மரங்களின் ஊடே சூரிய கிரணங்கள்  இதமாக ஒத்தடம்  கொடுக்க,சலசல வென்று ஓடிக்கொண்டிருக்கும் ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே நடை பயிற்சியை மேற்கொள்வது ,உடலுக்கு ஆரோக்யத்தை மட்டுமல்ல ,உள்ளத்திற்கும் அமைதியையும் ,மகிழ்ச்சியையும் கொடுக்கிறது .
          இந்த மகிழ்ச்சியெல்லாம் சிலமாதங்ககளுக்குத்தானே !நான் வசிக்கும்
சென்னையில் இவ்வாறு இயற்கை எழில் கொஞ்சும் இடம் எங்காவது இருக்கின்றதா ,அமைதியாக நடை பயிற்சி மேற்கொள்ள !அப்படி இருந்தால்
யாராவது தெரியப்படுத்துங்களேன் எனக்கு !

  சில புகைப்படங்களும் இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு !1.



              இப்படிக்கு
           கட்டுரை ஆசிரியை ,
          ஜெயா கிருஷ்ணன்
       அலை பேசி எண்: 9003037785 ..       


1 comment:

  1. Happy to read. Even we have experienced samething. Beautiful write up. Thanks

    ReplyDelete