உயிரைக்கொல்லும்"கொரோனா"Covid-19- vius என்னும் தொற்று நோய் தோராயமாக டிசம்பர் 2020ல் சீனா வில் உள்ள வூஹாங் நகரில் தோன்றி பின்பு உலகம் பூராவும் பரவியது .சீனா,அமெரிக்கா ,இத்தாலி ,ருஷ்ஷியா போன்ற மேலை நாடுகளில் கோடிக்கணக்கில்தொற்று ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்ககியது. ,இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன ?இந்தியாவில் கொரோனா நோய் பிப்ரவரி2020ல் கண்டறிந்தாலும் ,மார்ச் மாதம் முதல் மிகத்தீவிரமாகப்பரவி ,குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்காத நிலையில் சமூக ,தனிமைப்படுத்தல்ஊரடங்கு சட்டம் , நாட்டு மருந்து என்று பல நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளால் ,நோயாளிகள் கையாளப்பட்டு ,குணமாக்கப்பட்டனர். ஆயிக்கணக்கானோர் இந்நோய்க்கு பலியாயினர் . சென்ற மாதங்களைவிட ,இந்த மாதம் தமிழகத்தில் கோவிட் -19 ன் தீவிரம் சற்று குறைந்திருப்பதுபோல் தோன்றினாலும் ,தனி மனித இடை வெளியை கடைப்பிடித்து ,நம்மையும் பாதுகாத்துக்கொண்டு ,நடுவண் ,மற்றும் மாநில அரசுக்கும் ஒத்துஉழைப்பு கொடுப்போம் என்பதே நம் சுதந்திரதின சூளுரையாகக்கொள்வோம் ,பயப்பட வேண்டாம் .இதுவும் கடந்து போகும் .
கடந்த காலத்தில் நம் நாட்டில் பல கொடிய நோய்கள் தாக்கி பல்லாயிரவர் இறந்துள்ளனர் .அதை குணப்படுத்தவும் ,மேலும் அதை அறவே நாட்டிலிருந்து ஒழிக்கவும் பாடுபட்டு,ஒழிக்கவும் செய்தது நம் அரசாங்கம் .
1949,50களில் நுண்ணுயிர் (கடுமையான வைரஸ் ) பெரியம்மை(Smallpox) என்னும் தோற்று நோய் தோன்றி மக்களை மிகவும் வாட்டியது .காற்றினாலும் ,ஒருவர் உபயோகித்த பொருட்களைதீண்டினாலோ,அது அவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.. நோயின் தாக்கம் கடுமையாக இருக்கும் ,
தொடர்ந்துஉச்ச பட்ச காய்ச்சல் ,உடல் முழுவதும் பெரிய பெரிய கொப்புளங்கள் ,,எரிச்சல் ,தங்க முடியாத வலி என்று நோயாளிகள் துன்பப்பட்டனர் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் அதனால் இறந்தனர்
நோய் பரவுவதை தடுக்க ,இப்போதைப்போலவே தனிமைப்படு த்தி
தோற்று நோய் சிறப்பு மருத்துவ மனைகளில் கொண்டு சென்று அவர்களுக்கு சிகிச்சை கொடுத்தனர்.
மேலும் ,அம்மை தோற்று நோயாளி யார் வீட்டில் இருந்தாலும் ,அந்த சிறப்பு
மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தண்டையார்பேட் ல் இருந்தது அம்மனை . .உடனே அந்த ஆஸ்பத்திரி சிப்பந்திகள் ஆம்புலன்ஸ் கொண்டுவந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார்கள்.பிழைத்தால் வீட்டிற்கு வருவார்கள் .இல்லையேல் இறந்தவர்களை மருத்துவ நிர்வாகமே ஈமச்சடங்கை செய்துவிடும்.
அதற்காகவே பலர் பயந்து போய் வீட்டிலேயே வைத்துக்கொண்டு கை வைத்தியம் செய்வார்கள் ..சில அண்டை அயலார் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து மருத்துவ மனைக்கு சென்றவர்களும் அனேகம் .
என்ன ? சுதந்திர தினத்தை பற்றி எழுத வந்தவள் ,கொரோனா ,பெரியம்மை என்று தோற்று நோய்களைப்பற்றி விலா வாரியாகபேசுகிறாளே என்று தானே விழிக்கிறீர்கள் .வருகிறேன் கட்டுரையின் தலையாய பகுதிக்கு !
1951ல் ஆகஸ்ட் 15ந்தேதி ,நம் பாரத நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான நாள் அனால் எங்கள் குடும்பத்திற்கு துக்ககரமான நாள் .பெரியம்மை(smallpox) நோயினால்
துன்புற்று 15 நாட்கள் அவதிப்பட்டு ,அந்நோய்க்கு இரையாகி என் தந்தையார்
திரு .நரஸிம்ஹசாரி இறைவன் திருவடிகளை சேர்ந்தநாள் .
குடும்பத்தலைவனை இழந்து துக்கத்தில் தத்தளித்து என்னசெய்வது என்று தெரியாமல் கண்ணீரும் கம்பலையுமாய் திகைத்து நின்ற தினம்..எங்கள் தந்தை மறைந்ததுதான் நினைவுக்கு வருகிறது ஆகஸ்ட் 15ந்தேதி வரும்போதெல்லாம் .
எங்கள் தந்தையின் மரணம் ,அதன் தாக்கம் .அதைப்பற்றி அடுத்த பத்தியில் தொடர்கிறேன் .(தொடரும்).